/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முடிந்தது '‛டிஜிட்டல் கிராப் சர்வே' 1.63 லட்சம் சர்வே எண்கள் 'அப்டேட்'

ADDED : நவ 19, 2024 05:48 AM
மதுரை: மதுரையில் 645 வருவாய் கிராமங்களில் வேளாண் துறையின் மூலம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 230 சர்வே உட்பிரிவு எண்கள் மத்திய அரசின் 'அடங்கல்' செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
மதுரையில் விவசாய கல்லுாரி, உசிலம்பட்டி கிருஷ்ணா விவசாய கல்லுாரி, தேனி குள்ளபுரம் சி.ஏ.டி., கல்லுாரி மாணவர்கள் 1280 பேர் நவ. 6 முதல் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விவசாயிகளின் வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை ஆய்வு செய்து செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மதுரையில் 98.4 சதவீத பணி நிறைவடைந்துள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: 645 வருவாய் கிராமங்களில் ஒரு லட்சத்து 63ஆயிரத்து 230 சர்வே உட்பிரிவு எண்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.
மதுரை மேற்கில் 10 ஆயிரத்து 898, கிழக்கில் 11 ஆயிரத்து 346, வாடிப்பட்டியில் 1390, டி. கல்லுப்பட்டியில் 1951, மேலுாரில் 506, உசிலம்பட்டி, செல்லம்பட்டியில் 303 என, மொத்தம் 26 ஆயிரத்து 394 உட்பிரிவுகளை இணைக்கமுடியவில்லை. இப்பதிவுகள் வேளாண் பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என்றார்.