ADDED : மார் 11, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கேட்கடையில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.
இங்குள்ள கேட்கடை பாலமானது பாலமேடு, அலங்காநல்லுார், ஊமச்சிக்குளம், மதுரை என நான்கு ரோடுகளின் சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக தினமும் கனரகம் உட்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில் ஊமச்சிக்குளம் ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள் ஒழுங்கற்ற வரிசைகளில் இஷ்டத்திற்கு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது.
இவற்றுடன் கடைகளுக்கு சரக்கு கொண்டு வரும் வாகனங்களும் நிற்கின்றன. இதனால் இந்த ரோடு ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவு குறுகிவிட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் டூவீலர்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

