/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
தேசிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 11, 2025 05:14 AM

மதுரை: நாராயணா பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஸ்கேட்டிங், 6வது கூட்டமைப்பு குடோ கோப்பை ஆகியவற்றுக்கானதேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்று பள்ளிக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 11 வயதுக்குட்பட்ட 500 மீட்டர் இன்லைன் ஸ்கேட்டிங் பிரிவில் பள்ளியின் மதுரை வளாக மாணவர் தமிழினியன் தங்கம் வென்றார். அரசு அங்கீகாரம் பெற்ற குடோ இன்டர்நேஷனல் பெடரேஷன் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்த 6வது பெடரேஷன் குடோ கோப்பைக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஆயுஷ் குமார் லென்கா (30 கிலோ), 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சுலக்னா லென்கா (54 கிலோ) ஆகியோர் வெள்ளி வென்றனர். இருவரும் பள்ளியின் கட்டாக் வளாகத்தை சேர்ந்தவர்கள்.
நாராயணா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சிந்துரா நாராயணா கூறியதாவது: இச்சாதனைகள், மாணவர்களின் கடின உழைப்பு, ஒழுக்கம், அசைக்க முடியாத உறுதியின் பிரதிபலிப்பை காட்டுகிறது. தன்னம்பிக்கை மிகுந்த, திறமையான மாணவர்களைவடிவமைக்கவும், ஒவ்வொரு மாணவரின் விளையாட்டு கனவுகளை ஆதரிக்கவும் இவர்களின் வெற்றி துாண்டுகிறது.மாணவர்களின் கனவுகளே பள்ளியின் கனவுகள் என்றார்.

