ADDED : செப் 06, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் நகர் காங்., சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான இயக்க மறுசீரமைப்பு திட்டக் கூட்டம் தலைவர் நல்லமணி தலைமையில் நடந்தது.
மாநிலப் பார்வையாளர் நெடுஞ்செழியன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முருகன், வி.முருகன், ராஜ் பிரதாபன், நிர்வாகிகள் அன்னபூர்ணா தங்கராஜ், போஸ், பஞ்சவர்ணம், வரதராஜன், மாவட்ட துணைத் தலைவர்கள் செய்யது பாபு, சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலிட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் புதிய நிர்வாகிகளாக போட்டியிடுவதற்கான நுாற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.
