UPDATED : செப் 06, 2026 08:16 PM
ADDED : செப் 06, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை சேவாலயம் மாணவர் விடுதியில் அகில இந்திய ஹரிஜன சேவக சங்கம் தமிழக கிளை சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
சங்கச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பொறியாளர்கள் வெங்கடேஷ் பாபு, ராமசாமி, சேதுபதி, ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தினம், கிருஷ்ண ஜெயந்தி, வ.உ.சி., பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை மாணவர்களின் பிருந்தாவன தீப கேளிகை கோலாட்டம், புதுக்கோட்டை ஏ.பி.சி., கலை அறிவியல் கல்லுாரி மாணவி சிபிகாவின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.ஶ்ரீபூ கலாசார மைய நிர்வாக இயக்குநர் நிஷாராணி ஒருங்கிணைத்தார். கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் சந்திரன் நன்றி கூறினார்.
