ADDED : ஜன 08, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி : மதுரை வலையன்குளம் மணியரசு மகன் வேல்முருகன் 26. கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. நேற்று அப்பகுதி மயானத்தில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
உடல் அருகே 6 காலி மதுபாட்டில்கள், ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பெரிய கருங்கல் இருந்தன.
மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதமா என பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.