/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆற்றில் தண்ணீர் செல்வதற்காக வெட்டப்படும் செல்லுார் ரோடு பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் செல்வதில் தொடர் சிக்கல்

ADDED : அக் 26, 2024 05:27 AM
மதுரை: மதுரை செல்லுார் கண்மாய் நிறைந்து பந்தல்குடி கால்வாய் வழியாக வைகையாற்றுக்கு தண்ணீர் செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள ரோட்டை தோண்டும் பணியை நீர்வளத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இருநாட்களுக்கு முன் பெய்த கனமழையால் செல்லுார் கண்மாய் நிரம்பி மறுகால் செல்ல ஆரம்பித்தது. அங்கிருந்து கலுங்கு வழியாக பந்தல்குடி கால்வாய் மூலம் வைகையாற்றுக்குள் தண்ணீர் செல்ல வேண்டும்.
பந்தல்குடி கால்வாயின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளின் குப்பை டன் கணக்கில் குவிந்திருந்ததால் தண்ணீர் செல்லமுடியாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
கால்வாயின் உட்பகுதியில் வீடுகளின் பாதாள சாக்கடை குழாய்கள் நேரடியாக இணைக்கப்பட்டிருந்ததால் அதன் வழியாக வீடுகளுக்குள் தண்ணீர் நிறைந்தது.
குப்பை அகற்றப்பட்ட நிலையில் கலுங்கில் பயன்படுத்தாத ஷட்டர் பகுதி வழியே வைகையாற்றுக்குள் தண்ணீர் செல்லும் வகையில் ரோட்டில் பள்ளம் தோண்ட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார். இதையடுத்து ஷட்டர்கள் உள்ள ரோட்டில் 290 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலம், 4 மீட்டர் உயரத்திற்கு இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் மழை கொட்டியதால் பந்தல்குடி கால்வாயின் கொள்ளளவைத் தாண்டிய மழைநீரால் அப்பகுதியில் கார்களின் டயர்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பள்ளம் தோண்டும் பணி முடிந்த பின் தண்ணீர் வைகையாற்றுக்குள் செல்ல ஆரம்பித்தால் செல்லுாரில் தண்ணீர் தேங்காது.