/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பதவி உயர்வு ஒப்புதல் வழங்கியும் பட்டியல் வெளியிடவில்லை கூட்டுறவு சி.எஸ்.ஆர்.,கள் வேதனை
/
பதவி உயர்வு ஒப்புதல் வழங்கியும் பட்டியல் வெளியிடவில்லை கூட்டுறவு சி.எஸ்.ஆர்.,கள் வேதனை
பதவி உயர்வு ஒப்புதல் வழங்கியும் பட்டியல் வெளியிடவில்லை கூட்டுறவு சி.எஸ்.ஆர்.,கள் வேதனை
பதவி உயர்வு ஒப்புதல் வழங்கியும் பட்டியல் வெளியிடவில்லை கூட்டுறவு சி.எஸ்.ஆர்.,கள் வேதனை
ADDED : நவ 09, 2025 05:47 AM
மதுரை: கூட்டுறவுத் துறையில் சார்நிலை பதிவாளர்களுக்கு (சி.எஸ்.ஆர்.,) துணைப்பதிவாளர்களாக (டி.ஆர்.) பதவி உயர்வு ஒப்புதல் அளிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், அரசாணை பட்டியல் வெளியிடவில்லை என தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சி.எஸ்.ஆர்., பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறும் போது கூட்டுறவு பொது விநியோகத்துறையில் துணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் முதன்மை வருவாய் அலுவலர், கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மேலாண்மை இயக்குநர், நகர கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் துணைப்பதிவாளர்களாக நியமிக்கப்படுவர். பட்டியல் வெளியிட்ட 5 நாட்களுக்குள் பதவி உயர்வு கிடைத்து விடும். சி.எஸ்.ஆர்., நிலையில் இருந்து டி.ஆர்., ஆக பதவி உயர்வு பெறுவதற்கான அரசாணை 92 ன் படி ஆக., 28 ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களைக் கடந்தும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடாதது ஏன் என சங்க மாநில பொதுச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார். அவர் கூறியதாவது:
நகர கூட்டுறவு வங்கிகளில் உயரதிகாரிகள் இல்லாவிட்டால் டெபாசிட் தொகை வசூலிப்பதிலும் கடன் வழங்குவதிலும் சுணக்கம் ஏற்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல் கொள்முதல் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கான ஒப்புதல் கொடுத்த 5 நாட்களுக்குள் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர வேண்டும்.பணியில் சேர்ந்த நாளில் இருந்தே துணைப்பதிவாளருக்குரிய சம்பளத்தை பெறமுடியும். இரண்டு மாதங்களாக சி.எஸ்.ஆர். பதவிக்கான சம்பளம் தான் பெறுகிறோம். ஊதிய வேறுபாட்டை கணக்கிட்டு 'அரியர்' ஆக பெறவும் வழியில்லை. வேண்டியவர்களுக்கு விருப்பப்பட்ட மாவட்டத்திற்கு மாறுதல் செய்வதற்காக கால தாமதம் செய்கின்றனரோ என சந்தேகம் எழுகிறது.
கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு சங்கம் சார்பில் அக்.,22 ல் கடிதம் அனுப்பியும் பட்டியல் வெளியிடவில்லை. எனவே நவ., 13ல் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் நடத்தி, நவ., 16 முதல் 21 வரை நடத்தப்பட உள்ள கூட்டுறவு வாரவிழாவை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

