ADDED : நவ 09, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கடந்த ஓராண்டில் தொலைந்து போன, திருடப்பட்ட அலைபேசிகளை கண்டுபிடித்து தருவதிலும், மத்திய உபகரண அடையாளப் பதிவேட்டை (சி.இ.ஐ.ஆர்.,) பராமரிப்பிலும் சிறந்து செயல்பட்டதற்காக தமிழக அளவில் சிறந்ததாக உசிலம்பட்டி நகர் போலீஸ் ஸ்டேஷன் 3ம் இடம் பிடித்தது.
இதற்கான பாராட்டுச் சான்றிதழை சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி., சந்தீப்மிட்டல், தமிழ்நாடு எல்.எஸ்.ஏ., தொலைத் தொடர்புத்துறை தலைவர் சுதாகர் வழங்கினர். சைபர் கிரைம் எஸ்.ஐ., விஜயபாஸ்கர், ஏட்டு ராம்குமார் பெற்றுக்கொண்டனர்.

