ADDED : நவ 09, 2025 05:47 AM

மதுரை: கோவாவில் நடந்த இளையோர் தேசிய விளையாட்டு குழுமத்திற்கான (ஒய்.ஜி.எப்.ஐ.,) தேசிய அளவிலான சிலம்பம், யோகா போட்டிகளில், மதுரை எஸ்.டி., சிலம்பம், யோகா ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.
யோகா போட்டி 10 முதல் 19 வயது, அதற்கு மேற்பட்டோர் பிரிவுகளின் கீழ் மதுரை ஏ.வி.எம். ஸ்டார் பள்ளி தேஜூஸ்ரீ, விசாகன் பள்ளி யாழினி, ஹாசினி கார்த்திகா, பாலமேடு பத்திரகாளியம்மன் பள்ளி ரித்திகா தங்கப்பதக்கம் வென்றனர். லவ் புரபஷனல் பல்கலையின் பெட்ரா ஷிவானி, வேலுார் தொழில்நுட்ப பல்கலை ரித்திகா, சென்னை அரசு பல் மருத்துவக்கல்லுாரி அபிராமி தங்கப்பதக்கம் வென்றனர்.
சிலம்பப் போட்டியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி ஆஷிகா ஸ்ரீ, விளாங்குடி ஊராட்சி பள்ளி அகிலேஷ் தங்கம் வென்றனர்.
கராத்தே போட்டி விளாங்குடி ஊராட்சி பள்ளி உத்ரா, வீரமாமுனிவர் பள்ளி தனிஷ்கா, யாகவி, திரு.வி.க., பள்ளி லோகேஷ், செயின்ட் பிரிட்டோ பள்ளி மீனாட்சி நிரஞ்சனா, சிவசூர்யா, சர்வேஸ்வர், ஹோலி ஏஞ்சல் பள்ளி பிரேம்நாத், கேப்ரன்ஹால் பள்ளி ஸ்ரீ ரித்திகா, மகபூப்பாளையம் அரசுப் பள்ளி சுமத்ரா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். அகாடமி தலைவர் சிவபாண்டியன் பாராட்டினார்.

