/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை
/
கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை
ADDED : நவ 09, 2025 05:38 AM

சோழவந்தான்: கருப்பட்டி நெல் கொள்முதல் மையத்தில் முறைகேடுகள் நடப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி கருணாநிதி: இங்கு பெருமாள் கோயில் களத்தில் நெல் கொள்முதல் மையம் செயல்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை மையத்திற்கு கொண்டு வந்து 4 நாட்களுக்கு மேலாகிறது. 'ஏஜன்ட்'களும், அலுவலர்களும் கொள்முதல் செய்யாமல் தாமதம் செய்கின்றனர். சிலருக்கு மட்டும் கொள்முதல் செய்கின்றனர்.
மூடைக்கு ரூ.55 கொடுத்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற நிலை உள்ளது. 'ஏன் நெல்லை எடுக்கவில்லை' எனகேட்டால், 'ஈரப்பதமாக உள்ளது' என கூறி தட்டிக் கழிக்கின்றனர். 'ஈரப்பதத்தை அளவீடு செய்யுங்கள்' என கூறினாலும் கேட்பதில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்துள்ளோம். திறந்த வெளியில் நெல் கொட்டப்பட்டுள்ளதால் மழை, வெயி லால் சேதமடையும் நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.கொள்முதல் செய்து மூடைகளாக அடுக்கி வைத்தால் பாதுகாப்பாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

