/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லட்சுமி பள்ளியில் வாசிப்பு நிகழ்ச்சி
/
லட்சுமி பள்ளியில் வாசிப்பு நிகழ்ச்சி
ADDED : நவ 09, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., குழுமத்தின் லட்சுமி பள்ளியில் மாணவர்களிடம் நாளிதழ், புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் 'பிக்சல்ஸ் டூ பேஜஸ்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களிடையே அலைபேசி பயன்பாட்டை குறைக்கவும், நாளிதழ், புத்தகங்களின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப் பட்டன.
மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ்கள், பட்டம் உள்ளிட்ட சிறுவர் இதழ்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள், பெற்றோருடன் ஒரு மணி நேரம் வாசிப்பில் ஈடுபட்டனர். 'டிஜிட்டல் திரைகளை பார்ப்பதற்கு பதில் புத்தகம் படிப்போம்' என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஏற்பாடுகளை முதல்வர் சுபாஷினி செய்திருந்தார்.

