/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனமகிழ் மன்றம் :உயர்நீதிமன்றம் தடை
/
மனமகிழ் மன்றம் :உயர்நீதிமன்றம் தடை
ADDED : நவ 08, 2025 02:08 AM
மதுரை: வாடிப்பட்டி கோட்டைமேடு சுரேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
அலங்காநல்லுார் அருகே தண்டலையில் ஒரு மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. அலங்காநல்லுார் ஒன்றிய பகுதியில் மதுபான கடை அமைக்கக்கூடாது என மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதை ஏற்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். தண்டலையில் கோயில், பள்ளி அமைந்துள்ள பகுதியில் மது விற்பனை செய்தால் இடையூறு ஏற்படும்.
மது விற்பனைக்கு உரிமம் வழங்கிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோகுல் ஆஜரானார்.
நீதிபதிகள் உரிமம் வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

