/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை புதுமண்டபம் புனரமைப்பு 2026 பிப்ரவரி வரை அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மதுரை புதுமண்டபம் புனரமைப்பு 2026 பிப்ரவரி வரை அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை புதுமண்டபம் புனரமைப்பு 2026 பிப்ரவரி வரை அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை புதுமண்டபம் புனரமைப்பு 2026 பிப்ரவரி வரை அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 08, 2025 02:06 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணியை 2026 பிப்வரிக்குள் முடிக்க அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: புதுமண்டபத்தை புனரமைக்க கடைகள் குன்னத்துார் சத்திர வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் மண்டபத்தை புனரமைக்கவில்லை. சுற்றுலா பயணிகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. புனரமைப்பு பணிக்காக ஒருவர் நன்கொடை தர முன்வந்துள்ளார். புனரமைப்பு பணி ஒப்புதலுக்காக அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. புனரமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
2024 ஜூலை19 ல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் கூறியதாவது: அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதலுடன் புனரமைப்பு பணி துவங்கியுள்ளது. சிற்ப வேலைப்பாடு என்பதால் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். திட்ட மதிப்பு ரூ.ஒரு கோடியே 50 லட்சம். இப்பணியை நன்கொடை அடிப்படையில் ரூ.ஒரு கோடியே 50 லட்சத்தில் செய்துதர மதுரை செல்லுார் ராஜேந்திரன் முன்வந்துள்ளார். இவ்வாறு கூறியது.
இதை பதிவு செய்த இரு நீதிபதிகள் அமர்வு,'புனரமைப்பு பணியை 2024 டிச.,31க்குள் முடிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர், ''பெரும்பான்மையான பணி முடிந்துவிட்டது. இந்த பணி நுட்பமானது. நிபுணர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படுகிறது. 2026 பிப்.,28 வரை அவகாசம் தேவை,'' என மனு செய்தார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பில் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் ஆஜரானார்.
பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அவகாசம் அளிக்கப்படுகிறது. இதை நிறைவேற்றியது குறித்து கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் 2026 மார்ச் 2 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றது.

