தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கத்தினர் போராட்டம்

பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கத்தினர் போராட்டம்

பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கத்தினர் போராட்டம்


UPDATED : நவ 07, 2026 05:15 AM

ADDED : நவ 06, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 05:15 AM ADDED : நவ 06, 2026 07:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ஒத்தக்கடை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

பத்திரப்பதிவு துறையில் ஆவண எழுத்தர்களின் பணியைத் தனியாருக்கு வழங்கும் விதமாகவும், ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் 'ஸ்டார் 3.0' மற்றும் இ-டெண்டர் நடைமுறைகளைக் கொண்டு வந்திருப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.

ஒத்தக்கடையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட பத்திரம் எழுதுவோர் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் வாசுதேவன், பொருளாளர் பாஸ்கரன், மாநில பொதுச்செயலாளர் கண்ணன், சட்ட ஆலோசகர் முருகன் உள்ளிட்டோர், புதிய ஆன்லைன் மற்றும் தனியார் மயமாக்கல் நடைமுறைகளால் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆவண மற்றும் பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் சொத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்குவதாகவும் தெரிவித்தனர். துணைச் செயலாளர்கள் பாஸ்கரன், விஜயகுமார் உள்ளிட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us