ADDED : மே 13, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சித்திரை திருவிழாவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு திருவேங்கடப்பெருமாள் சீர் வழங்கும் நிகழ்வும், எதிர்சேவை நிகழ்ச்சிக்காக, சுவாமிகள் புறப்பட்டு எழுமலை ராஜகணபதி கோயில் அருகே எழுந்தருளினர்.நேற்று காலை சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் புறப்பட்டு எழுமலை ராஜகணபதி கோயில் அருகே மண்டகப்படிக்கும், திருவேங்கடப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு ராஜகணபதி கோயில் மண்டகப்படிக்கும் எழுந்தருளினர்.
இன்று(மே 13) காலை பெருமாளிடம் இருந்து மாலை மரியாதை உள்ளிட்ட சீர்வரிசை சுப்பிரமணியருக்கு வழங்கப்பட்ட பின் இருவரும் புறப்பாடாகி நகர் வலமாக சென்று எழுமலை பெரிய கண்மாய் பகுதியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து சுப்பிரமணியரும், பெருமாளும் தங்கள் கோயில்களுக்கு செல்வார்கள்.