மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புரட்சிப் பாவலர் மன்றம் சார்பில், எழுத்தாளர் முத்துவேலன் படைப்புலக உரையரங்கம் நடந்தது.
புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். இலக்கிய மன்ற மாநிலக் குழு உறுப்பினர் முத்தையா வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் மனோகரன், துணைச் செயலாளர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் முத்துவேலனின் சிறுகதைத் தொகுப்புகளான 'கண்ணீரில் எழுதாதே', 'எங்கிருந்தோ வந்தான்' நுால்களை த.மு.எ.க.ச., மாநிலத் துணைச் செயலாளர் ரசா, எழுத்தாளர் சரவணன் விமர்சனம் செய்தனர். 'சேரமான் காதலியர் அந்தாதி', 'கொற்றவன் கூத்து' குறுங்காப்பியங்களை மதுரைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் காந்திமதி, செல்லுார் உபாத்தியாயர் தமிழரசன் விமர்சனம் செய்தனர். முத்துவேலன் ஏற்புரை வழங்கினார். இலக்கிய மன்ற மாவட்டத் தலைவர் செல்லா நன்றி கூறினார்.