/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நரிக்குடி கிருதுமால் நதியில் முதலை: அச்சத்தில் மக்கள்
/
நரிக்குடி கிருதுமால் நதியில் முதலை: அச்சத்தில் மக்கள்
நரிக்குடி கிருதுமால் நதியில் முதலை: அச்சத்தில் மக்கள்
நரிக்குடி கிருதுமால் நதியில் முதலை: அச்சத்தில் மக்கள்
ADDED : டிச 12, 2025 04:29 AM

நரிக்குடி: நரிக்குடி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருதுமால் நதியில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதில் முதலைகள் சுற்றித் திரிவதாக அப்பகுதியில் தகவல் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நரிக்குடி பகுதி மக்களின் குடிநீர், விவசாயம், கால்நடைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டிச. 5ல் வைகை அணையில் இருந்து, 8 நாட்களுக்கு கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிக அளவு தண்ணீர் வரத்தால் கரை புரண்டு ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உளுத்திமடை, உலக்குடி, மானூர், மறையூர், வீரசோழன், பள்ளப்பட்டி பகுதிகளில் மீன் பிடிக்க ஏராளமானவர்கள் தூண்டில் போட்டு வருகின்றனர். அப்பாது உலக்குடி அருகே தண்ணீரில் முதலை தெரிந்தது. இது குறித்த போட்டோ, வீடியோ பரவி வருகிறது. முதலை என்ன ஆனது என அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

