UPDATED : அக் 27, 2026 07:11 PM
ADDED : அக் 27, 2026 07:06 PM
மதுரை: ‘வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார்.
வாழை மரங்களில் கீழ்மட்ட இலைகளை அகற்றி சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளால் முட்டுகொடுக்க வேண்டும். வாழைத்தார்களை மூடி வைக்கவேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்யவேண்டும். மா, கொய்யா, சப்போட்டா மரங்களுக்கு காற்றோட்டத்துக்காக கிளைகளை கவாத்து செய்து வடிகால் வசதி செய்யவேண்டும்.
துார்ப்பகுதியில் நோய்த்தடுப்பு மருந்து நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகளை தாங்கு குச்சிகளுடன் சேர்த்து கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்த பின் தொழுஉரம் இட்டு, நோய்த் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். பசுமைக்குடில், நிழல்வலைக்குடில் அருகில் மரங்கள் இருந்தால் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
வாழை, வெங்காயம், மிளகாய், தக்காளி பயிர்களுக்கு பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும் என்றார்.
