sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்ற சி.எஸ்.ஐ.,: சி.பி.ஐ., வழக்குப்பதிய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

/

அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்ற சி.எஸ்.ஐ.,: சி.பி.ஐ., வழக்குப்பதிய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்ற சி.எஸ்.ஐ.,: சி.பி.ஐ., வழக்குப்பதிய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்ற சி.எஸ்.ஐ.,: சி.பி.ஐ., வழக்குப்பதிய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

2


ADDED : நவ 23, 2024 05:35 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:35 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரையில் அரசின் ஒப்படைவு நிலத்தை சி.எஸ்.ஐ., மதுரை- ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த கிறிஸ்தவ சீர்திருத்த இயக்க தலைவர் தேவசகாயம் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை தல்லாகுளத்தில் 31.10 ஏக்கர் நிலத்தை 1912ல் அமெரிக்க மிஷனரியின் 'அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர்ஸ் பார் பாரின் மிஷன்ஸ் (ஏ.பி.சி.எப்.எம்.,) வசம் தமிழக அரசால் ஒப்படைவு செய்யப்பட்டது.

நிலத்தை தொண்டு நோக்கம் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான தொழில் மையம் அமைக்க பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. நிபந்தனையை மீறி சி.எஸ்.ஐ., மதுரை- ராமநாதபுரம் திருமண்டலம் நிர்வாகம் மூலம் மோசடியாக நிலம் விற்கப்பட்டுள்ளது. இப்பரிவர்த்தனையில் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது. இச்சட்டவிரோத நடவடிக்கைக்கு பல அரசு அதிகாரிகள் உடந்தை. போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. விசாரணை கோரி சி.பி.ஐ.,க்கு 2020ல் புகார் அனுப்பினேன். மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்:

இவ்வழக்கில் பெரிய அளவில் மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. சர்ச்சிற்கு சொந்தமான சொத்தினை அபகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்விக்கு உட்படுத்திய நபர்களின் குரலை அதன் நிர்வாகிகள் முடக்கியதால், சர்ச் குரலற்றதாகிவிட்டது. சர்ச் உறுப்பினர் என்ற முறையில் மனுதாரர் மாநில போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சில காரணங்களால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. சி.பி.ஐ.,க்கு புகார் அனுப்பினார். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. அச்சொத்தானது தற்போதுவரை அரசின் சொத்தாகவே உள்ளது. அதை விற்க சர்ச் நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.

முன்பு வீடுகளிலிருந்து சர்ச்சிற்கு நிதி சென்றது. தற்போது மனசாட்சியுள்ளவர்கள் சர்ச் நிர்வாகத்தின் நாற்காலியை அலங்கரிக்கவில்லை. பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக சர்ச் சொத்துக்கள் நிர்வாகிகளால் மோசடி செய்யப்படுகின்றன. சொத்துக்களை பராமரிக்க பிஷப் மற்றும் பிற நிர்வாகிகள் கடமைப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, தற்போது இந்தியா முழுவதும், சர்ச் சொத்துக்கள் அதன் நிர்வாகிகளால் சரியாக நிர்வகிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சில மோசடிகள், தமிழகத்தின் ஒரு பகுதியிலுள்ள சர்ச்சிற்கு சொந்தமான சொத்துக்கள் விற்கப்பட்டது பற்றி சாமுவேல்ராஜ் எழுதிய 'சிலுவையில் அறையப்பட்ட தலித் கிறிஸ்தவர்கள்' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலையால் வெளியிடப்பட்ட ஜோசப் ஞானசீலன் முத்துராஜ் எழுதிய,'சர்ச்சுகளுக்கான கார்ப்பரேட் கவர்னன்ஸ்' தலைப்பில் சர்ச் நிர்வாகிகள் செய்த பல தவறான செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.உயர்ந்த நோக்கத்திற்காக​நிலம் ஒப்படைவு செய்யப்பட்டது. அந்நோக்கத்திற்கு பயன்படுத்தவில்லை. எதற்காக இச்சங்கம் உருவாக்கப்பட்டது, சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன பற்றி திருச்சபையின் நிர்வாகிகள் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் அந்நிலத்தை ஏதோ சுயநலத்திற்காக பயன் படுத்தினர்.ஒவ்வொரு மதமும் தொண்டு செய்வதை நோக்கமாகக் கொண்டது. எங்கெல்லாம் அவல நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுளால் அனுப்பிய நபர்கள் வந்து தொண்டு செய்வார்கள் என்பது அனைத்து மதத்தினரின் நம்பிக்கை. அந்நபர்கள் தற்போது தங்கள் சொந்த மதம், நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சி.எஸ்.ஐ.டி.ஏ., மற்றும் சி.எஸ்.ஐ., மதுரை-ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் நேர்மையற்ற நோக்கில் பல அரசு அதிகாரிகளின் உடந்தையுடன் அரசின் ஒப்படைவு நிலத்தை சட்டவிரோதமாக மூன்றாவது நபர்களுக்கு விற்றுள்ளனர்.

ரூ.22 கோடி மதிப்பிலான சொத்திற்கு விதிகளை மீறி ரூ.91 லட்சத்து 43 ஆயிரத்து 472 க்கு மட்டுமே ரொக்க ரசீதை பெற்றுள்ளனர். எவ்வித உரிமையும் இல்லாமல் ரூ.1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 472க்கு அரசு சொத்து சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் விசாரணையில் ஆர்வம் செலுத்தவில்லை.குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது. மோசடி பரிவர்த்தனையில் தொடர்புடைய நபர்கள் மீது டில்லி சி.பி.ஐ., மற்றும் சென்னை சி.பி.ஐ., இணை இயக்குனர் வழக்குப் பதிய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us