/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை
/
மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை
மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை
மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை
ADDED : பிப் 20, 2025 05:39 AM
மதுரை: மதுரை மத்திய சிறையில் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவுப்படி கோழிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகளை இறைச்சியாக்கி புதன், ஞாயிறு அன்று கைதிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் சிறை நிர்வாகத்திற்கு செலவினம் குறைந்துள்ளது.
தற்போது 6 குடில்கள் அமைக்கப்பட்டு தலா 1300 கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 20 கைதிகள் பராமரித்து வருகின்றனர். பொதுமக்களும் சிக்கன் வாங்கும் வகையில் சிறை வளாகத்திலேயே கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் கோழியாக உற்பத்தி செய்து இறைச்சியாக்கப்பட்டு கைதிகளுக்கு தலா 150 கிராம் வழங்கப்படுகிறது.
மதுரை சிறைக்கு மட்டும் நேற்று 340 கிலோ இறைச்சி வழங்கப்பட்டது. மாவட்ட சிறைகளுக்கு தலா 40 கிலோ வரை வழங்கப்பட்டது.
சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''மதுரை சிறை, பெண்கள் சிறை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் சிறை கைதிகளுக்கும் கறி வழங்கப்பட்டது.
கோழிகளை கண்காணிக்க கால்நடை டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., முருகேசன் மேற்பார்வையில் கூடுதல் எண்ணிக்கையில் கோழி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

