/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காவிரி குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு விரைவில் சரியாகும்: கலெக்டர்
/
காவிரி குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு விரைவில் சரியாகும்: கலெக்டர்
காவிரி குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு விரைவில் சரியாகும்: கலெக்டர்
காவிரி குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு விரைவில் சரியாகும்: கலெக்டர்
ADDED : மார் 04, 2024 05:41 AM
மதுரை: மின்தடையால் ஏற்படும் காவிரி குடிநீர் வினியோக பாதிப்பு விரைவில் சரியாகும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு காவிரியில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கான தலைமைப் பணியிடம் (3 நீர்சேகரிப்பு கிணறுகள், ஒரு பொது நீர் சேகரிப்பு தொட்டி) கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ளது.
இங்கு தினமும் நீரேற்றம் செய்யப்படும் குடிநீரின் அளவு 52.81 மில்லியன் லிட்டர். இதற்காக மாயனுார் உபமின் நிலையில் இருந்து 9 கி.மீ., நீளத்திற்கு தனி மின்வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அடிக்கடி மரக்கிளை முறிவுகளால் மின்தடை ஏற்பட்டு, குடிநீரேற்றம் பாதிக்கிறது.குடிநீரை தங்குதடையின்றி வழங்க 9 கி.மீ., நீளத்திற்கு காப்பிடப்பட்ட மின்கடத்தி அமைக்க, மின்சார வாரியத்திற்கு ஜன.23ல் ரூ.4 கோடி செலுத்தப்பட்டது. அதன்பின் பிப்.4 ல் துவங்கி 8 கி.மீ., நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பணி நடைபெறும்போது மின்தடையால் மட்டுமே குடிநீர் அளவு நிர்ணயித்ததைவிட குறைவாக நீரேற்றம் செய்யப்படுகிறது.
இப்பணிகள் மாயனுார் அருகே ரயில்வே வழித்தடத்திலும், காவிரி தென்கரை கால்வாய் பகுதியை கடப்பதற்கும் தற்போது நடக்கின்றன. இதற்கு ரயில்வே துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒருவாரத்தில் முடிவடைந்து நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் அளவு வினியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

