ADDED : ஜன 18, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா பாப்பையாபுரத்தில் வைகை கூட்டுக் குடிநீர் திட்ட பைப் பதிப்பதற்காக தோண்டிய பள்ளம் ஆறு மாதங்களாக மூடப்படாமல் உள்ளது.
வைகை கூட்டுக் குடிநீர் திட்ட பணியாளர்கள் புதிய பைப் பதிக்க ஆறு மாதங்களுக்கு முன்பு பள்ளங்கள் தோண்டினர். அதில் பைப்புகளை பதித்தனர். அத்துடன் பணிகளையும், பள்ளங்களை மூடுவதையும் மறந்தே விட்டனர். இந்தப் பள்ளம் ஊரின் நடுப்பகுதியில் தோண்டப்பட்டுள்ளது. இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் செல்கின்றனர். பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.