UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:14 PM

சமயநல்லுார்: ''சமயநல்லுார், தேனுார் ரோட்டில் ஆபத்தான வளைவில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்'' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு சமயநல்லுாரில் இருந்து தேனுார் செல்லும் வழியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே ஆபத்தான வளைவு உள்ளது. அடிக்கடி இங்கு விபத்துகள் நடைபெறும். இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டிய ரோடு முறையாக சீரமைக்கப் படாததால் கரடு, முரடாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது.
ஏற்கனவே ரோடுவளைவில் சேதமடைந்துள்ளதால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. மதுக்கடை பகுதியில் போதையில் வருவோர் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. விபரீதம் விளையும் முன் நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
