/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடன் வசூல் தீர்ப்பாய உத்தரவு தாமதமின்றி பதிவேற்ற வழக்கு * உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
கடன் வசூல் தீர்ப்பாய உத்தரவு தாமதமின்றி பதிவேற்ற வழக்கு * உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கடன் வசூல் தீர்ப்பாய உத்தரவு தாமதமின்றி பதிவேற்ற வழக்கு * உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கடன் வசூல் தீர்ப்பாய உத்தரவு தாமதமின்றி பதிவேற்ற வழக்கு * உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : நவ 27, 2024 05:50 AM
மதுரை : தமிழக கடன் வசூல் தீர்ப்பாய உத்தரவுகளை முறையாக, உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்ய தாக்கலான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி வீரேஸ்வரம் சிவா தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியாவிலுள்ள பிற கடன் வசூல் தீர்ப்பாயங்களின் இடைக்கால, இறுதி, தினசரி உத்தரவுகள் இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவையில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை முறையாக, உரிய நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை. உத்தரவின் முக்கியமான பகுதி மட்டுமே இணையதளத்தில் இடம்பெறுகிறது. தீர்ப்பாய சின்னம், மனுதாரர், வழக்கறிஞர்கள் பெயர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து இடம்பெறுவதில்லை.
கடன் வாங்கியோர் தீர்ப்பாயங்களில் வழக்கு தொடர்கின்றனர். தீர்ப்பாய உத்தரவு நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்கின்றனர். சம்பந்தப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் சமர்ப்பித்தால் ஏற்க மறுக்கின்றன. சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல்கள் சமர்ப்பிக்க வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் கோரி விண்ணப்பித்தால் தீர்ப்பாயங்கள் வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது. தீர்ப்பாய உத்தரவுகளை முறையாக, உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு மத்திய நிதித்துறை செயலர், சென்னை, மதுரை, கோவை கடன் வசூல் தீர்ப்பாயங்களின் பதிவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜன.8 க்கு ஒத்திவைத்தது.