தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/உறுப்பு கொடையாளர்களுக்கு ‘பிரத்யேக சுவர்’

உறுப்பு கொடையாளர்களுக்கு ‘பிரத்யேக சுவர்’

உறுப்பு கொடையாளர்களுக்கு ‘பிரத்யேக சுவர்’


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுப்பு கொடையாளர்களுக்கென ‘பிரத்யேக சுவர்’ மதுரை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டது.

விபத்து மற்றும் தலைக்காய அவசர சிகிச்சை பிரிவில் இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளது. விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களின் போட்டோக்கள் இந்த சுவரில் இடம்பெற்றுள்ளன. இந்த சுவரை டீன் அருள் சுந்தரேஷ் குமார் திறந்து வைத்தார். உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லுாரி மாணவர்களுக்கான ஹைக்கூ, கவிதை, ஓவியம், குறும்படபோட்டிகள் நடத்தப்பட்டன. மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன், சிறுநீரகவியல் துறைத்தலைவர் பாலமுருகன், அவசர சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் தானப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us