/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., மீது அவதுாறு வழக்கு: வி.ஹெச்.பி., வலியுறுத்தல்
/
நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., மீது அவதுாறு வழக்கு: வி.ஹெச்.பி., வலியுறுத்தல்
நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., மீது அவதுாறு வழக்கு: வி.ஹெச்.பி., வலியுறுத்தல்
நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., மீது அவதுாறு வழக்கு: வி.ஹெச்.பி., வலியுறுத்தல்
ADDED : டிச 04, 2025 01:31 AM
மதுரை: 'மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை மறைமுகமாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் மீது உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, அவதுாறு வழக்கு தொடர வேண்டும்' என, விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில், இந்த அமைப்பின் மாநில இணை பொதுச்செயலர் சந்திரசேகரன் கூறியதாவது:
கடந்த ஏழு ஆண்டுகளாக எம்.பி.,யாக உள்ள வெங்கடேசன், எவ்வித திட்டத்தையும் நகரின் வளர்ச்சிக்கு செயல்படுத்தவில்லை. வெறும் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற்ற அவர், அறிக்கை வாயிலாக மட்டுமே தன்னை, எம்.பி.,யாக காட்டிக்கொள்கிறார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக தெரிவித்த கருத்தை அவர் வாபஸ் பெற்று, ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தொடர்ந்து ஹிந்துக்கள் குறித்து தவறாக பேசினால் அவரது வீடு, அலுவலகம் முன், ஹிந்து அமைப்புகளை திரட்டி முற்றுகையிடுவோம்.
நீதிபதியை விமர்சித்து பேசிய அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வெங்கடேசன் எம்.பி., மீது ஹிந்து மக்கள் கட்சி சார்பில், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அதில், 'எம்.பி.,யை கைது செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

