நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா குடிசேரி ஊராட்சி செம்பட்டியை சேர்ந்த 100 நாள் வேலை பணியாளர்கள் நேற்று சேடப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: 100 நாள் வேலை செய்வதற்கு வாரம் ரூ.600 லஞ்சமாக ஊராட்சி நிர்வாகத்தினர் பெறுகின்றனர். தர மறுப்பவர்களுக்கு வேலை வழங்குவதில்லை. இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்றனர். ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

