ADDED : நவ 05, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: பத்திர பதிவு நடைமுறையை இ - டெண்டர் மூலம் விண்ணப்பிப்பது முதல் ஆவணங்கள் பதிவேற்றம் வரை ‘ஆன்லைன்’ வாயிலாக செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.
இம்முறையால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக பத்திர எழுத்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (நவ.,5) செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன் அங்குள்ள பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகி லோகமணி தலைமையில் இ-டெண்டர் நடைமுறையை ரத்து செய்ய கோஷம் எழுப்பினர். ரத்து செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
