ADDED : மே 29, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: முன்னாள் பா.பி., தலைவர் மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மணிமண்டபம் அமைக்க உசிலம்பட்டி பழைய அரசு பள்ளி, கள்ளர் விடுதி பகுதியில் இடம் தேர்வு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்கள் பா.பி., மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன், நிர்வாகிகள் நேதாஜி, போஸ், அன்பு மற்றும் கட்சியினர் உசிலம்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைவளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கள்ளர் பொது நிதியில் இருந்து கட்டிய, நூறாண்டுகளுக்கு மேலான பள்ளிக்கான இடத்தை மக்களின் கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெரிசல் இல்லாத பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.