/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டியில் இன்று ஆர்ப்பாட்டம்
/
உசிலம்பட்டியில் இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 01, 2025 02:47 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நீராதார திட்டமான 58 கிராம கால்வாயில், வைகை, பெரியாறு அணைகளில் போதிய நீர்மட்டம் இருந்தும் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க மறுப்பதைக் கண்டித்து ஆக. 29ல், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
அன்று விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி இருந்ததால் போலீசார் அனுமதி தரவில்லை. எனவே போராட்டத்தை ஒத்திவைத்து இன்று (செப் 1) காலை 9:00 மணிக்கு உசிலம்பட்டி திருமுருகன் கோயில் அருகே அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
58 கிராம கால்வாயில் ஆண்டு தோறும் தண்ணீர் திறக்க அரசாணை, கால்வாய் மதகுப்பகுதியை 62 அடியாகக் குறைக்க வேண்டும், கால்வாயில் பலம் இல்லாத பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் அமைத்து கால்வாயின் உயர்ந்த பட்ச அளவான 316 கன அடி நீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.