நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டியில் மதுரை புறநகர் ஒன்றிய ஹிந்து இளைஞர் முன்னணி, ஹிந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பெருகி வரும் போதை பேராபத்தை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் கணேசன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கோஷமிட்டனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் குமார், மலைச்சாமி, சுபேந்திரன், ராஜபிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர் தலைவர் சிவசங்கர் நன்றி கூறினார்.

