நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கிளைத் தலைவர் அருணாசலம் தலைமையில் நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சி.ஐ.டி.யு., நிர்வாகி மணவாளன், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜேந்திரன், கிருபாகரன், சத்யராஜ், அடைக்கண் பேசினர்.

