ADDED : செப் 25, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: திருவேடகத்தில் உள்ள வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பூச்சம்பட்டி ஊராட்சி சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர். பி.டி.ஓ., சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் சுப்பையா சமரசம் செய்தனர்.
