தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : செப் 25, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* டூவீலரில் இருந்து

விழுந்தவர் பலி

திருமங்கலம்: பேரையூர் அருகே அப்பக்கரையை சேர்ந்த பிரகாஷ் 29, இவர் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணியில் பொறியாளராக வேலை பார்ததார். இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது. இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இவர் செப்.10ல் வேலைக்கு சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அவருடன் அரக்கோணம் கோபாலகிருஷ்ணன் என்பவரும் வந்தார். திருமங்கலம் – சோழவந்தான் ரோடு செங்குளம் சர்வீஸ் ரோட்டில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் தடுமாறி விழுந்ததில் இருவரும் காயம் அடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிரகாஷ் பலியானார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

–––––

* கும்பாபிஷேகத்தில்

நகை திருட்டு

திருமங்கலம்: வாடிப்பட்டி கருப்பட்டியை சேர்ந்த அன்பு ராஜா 42, இவரது மனைவி காயத்ரி. இருவரும் திருமங்கலம் ராயபாளையத்தில் உள்ள சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்தனர். சாமி கும்பிட்ட பின்பு வெளியே வந்து பார்த்தபோது காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகைகள் மாயமானது தெரிந்தது. திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us