ADDED : அக் 27, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் பஸ்ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், இணைச் செயலாளர் பானு முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் பாண்டியம்மாள், வேல்மயில், தங்கராஜ் பங்கேற்றனர்.
