/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனை
/
மாநகராட்சி மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனை
ADDED : ஜூன் 12, 2025 02:12 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவ சிறப்பு முகாமை ஈ.வெ.ரா. பள்ளியில் மேயர் இந்திராணி துவக்கி வைத்தார்.
மாநகராட்சி, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி இணைந்து வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'புன்னகையின் பாதை திட்டம்' செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூன் முதல் டிசம்பர் வரை பல கட்டங்களாக இலவச பல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதன் துவக்க விழாவிற்கு மேயர் தலைமை வகித்தார். முகாமில் பல் மருத்துவ சிகிச்சை குறித்து விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர் நுார்ஜஹான், டாக்டர் தன்வீர், சமூக நல பல் மருத்துவ பிரிவு துறைத் தலைவர் திவ்யா, உதவி விரிவுரையாளர் லாவண்யா ராகவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.