நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை கோமதிபுரம், தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் துாய்மைப்பணியாளர்கள், மின்விளக்கு மாற்றுபவர்கள் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரங்கள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
சங்கத் தலைவர் ராகவன், உப தலைவர் சேதுராம்,செயலாளர் ரகுபதி,பொருளாளர் காசி , இணைச்செயலாளர்கள் திரவியம், சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஹெலன் தனபால், முகம்மது அபுபக்கர், காளிமுத்து, முருகன் , ராஜா கோவிந்தசாமி, ஆலோசகர் பழனிக்குமார் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் நரசிம்மராஜ் நன்றி கூறினார்.