/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
/
வாடிப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
ADDED : டிச 08, 2024 04:53 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.ஒரு கோடியே 9 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டட பணிக்கு பூமி பூஜை, 4வது வார்டு ஆர்.வி.,நகரில் ரூ.36.50 லட்சத்தில் புதிய பூங்கா, 15வது வார்டு பொட்டுலுபட்டியில் ரூ.37 லட்சத்தில் சமுதாயக்கூடம் திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி, முன்னாள் நகர் செயலாளர் பிரகாஷ், அலங்காநல்லுார், சோழவந்தான் நகர் செயலாளர் ரகுபதி, சத்திய பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், கார்த்திகாராணி, பூமிநாதன் மற்றும் துறை அலுவலர்கள், தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.