/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜவுளி வியாபாரம் நடந்ததா ; வீடியோ பரவியதால் புகார்

ADDED : மார் 16, 2024 07:28 AM
மதுரை : அலங்காநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை கவனிக்காமல் ஜவுளி வியாபாரம் நடந்ததாக வீடியோ வெளியானது.
அலங்காநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று முன்தினம் சென்ற நோயாளிகள் பலர் சிகிச்சைக்காக காத்திருந்துஉள்ளனர். நீண்ட நேரமாகியும் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாததால் பொறுமை இழந்துள்ளனர்.
இதையடுத்து நோயாளிகள் சுகாதார நிலைய ஊழியர்களை தேடிய போது, ஒரு அறையில் சேலை வியாபாரம் செய்ய வந்தவருடன் பேசிக் கொண்டுஇருந்ததாக வீடியோ வைரலானது.
இதையடுத்து நோயாளிகளுடன் வந்த சமூகஆர்வலர் மலர் அபிநயா என்பவர் மருத்துவ உயர்அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ''மணிக்கணக்கில் நோயாளிகள் காத்திருந்ததாக'' புகார் அளித்துள்ளார். அவர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவ துணை இயக்குனர் குமரகுருவிடம் கேட்டபோது, ''ஒரே நாளில் நடவடிக்கை எடுக்க முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். விளக்கம் கேட்கவே 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பின் விசாரணை நடத்தி அப்புறம்தான் நடவடிக்கை எடுக்க முடியும். என்னிடம் புகார் தெரிவித்த உடனேயே நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டேன்'' என்றார்.