/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கோலாகலமாக துவங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
/
மதுரையில் கோலாகலமாக துவங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
மதுரையில் கோலாகலமாக துவங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
மதுரையில் கோலாகலமாக துவங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மார் 27, 2025 06:21 AM

மதுரை: தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியை தேர்வு செய்யும் வகையில் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக நேற்று துவங்கியது.
ஆண்டுதோறும் பிளஸ்2 தேர்வு முடிந்த பின் நடத்தப்படும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள், பெற்றோர் முதல்நாள் நிகழ்ச்சியில் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றனர்.
முதல்நாள் கருத்தரங்கை கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ., சுந்தரராமன், அமிர்தா விஷ்வ வித்ய பீடம் இயக்குநர் பேராசிரியர் சிதானந்தமிர்தா சைதன்யா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் பேராசிரியர் ஜெய்சங்கர், மாணவிகள் அனு ஸ்நேகா, விஹாஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கல்வி நிறுவனங்களின் அரங்குகளை கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சி.இ.ஓ., சுந்தரராமன், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவன பேராசிரியை கீதா, ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி டீன் பிரகாஷ், கற்பகம் கல்வி நிறுவனங்கள் அட்மிஷன் இயக்குநர் சுப்புராஜ் திறந்து வைத்தனர்.
விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை ஓரிடத்தில்...
கல்வி நிறுவனங்களின் கண்காட்சி காலை 10:00 மணி முதல் இடைவேளையின்றி மாலை 6:30 மணி வரை நடந்தது. மாணவர்கள், பெற்றோர் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள், முதல் முறையாக முன்னணி பள்ளிகள் என 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், கட்டண விபரம், படிப்புக்கான வேலைவாய்ப்புகள் அங்கேயே கேட்டு பெற்றோர் தெரிந்துகொண்டனர். கல்லுாரிகள் குறித்த கட்டமைப்பு வசதிகள், முந்தைய மாணவர்கள் பெற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பெற்றோர் கேட்டு தெரிந்துகொண்டனர்.
விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரை ஒரே குடையின் கீழ் உள்ள இந்த வசதியால் தேவையான ஆலோசனைகளை பெற்ற பெற்றோர் நிம்மதியடைந்தனர். இதன்மூலம் கல்லுாரிகளை தேடிச் சென்று அலைய வேண்டிய வேலை தவிர்க்கப்பட்டது என பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.எச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.