ADDED : மார் 28, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி - - காரைக்குடி ரோட்டின் நடுவே காவிரி கூட்டுக் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இத்தொட்டி சிதிலமடைந்து மூடிகள் உடைந்ததால் எந்நேரமும் திறந்து கிடந்தது.
இதில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து தினமும் விபத்து நடந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவிச் செயற்பொறியாளர் நாகராஜன் தொட்டியை பழுது நீக்கி சீரமைத்தார்.