/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் ஸ்மார்ட் 'ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' மதுரையில் கோலாகல துவக்கம்
/
தினமலர் ஸ்மார்ட் 'ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' மதுரையில் கோலாகல துவக்கம்
தினமலர் ஸ்மார்ட் 'ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' மதுரையில் கோலாகல துவக்கம்
தினமலர் ஸ்மார்ட் 'ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' மதுரையில் கோலாகல துவக்கம்
UPDATED : ஆக 30, 2025 08:26 AM
ADDED : ஆக 30, 2025 04:09 AM

மதுரை: மதுரையில் தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2025 வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ்,
பர்னிச்சர்ஸ், பில்டிங் அன்ட் ஆட்டோமொபைல் எக்ஸ்போ தமுக்கம் மைதானத்தில்
இக்கண்காட்சியை மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் திறந்து வைத்தார்.
தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் எல்.ராமசுப்பு முன்னிலை வகித்தார். சத்யா நிறுவன பொது மேலாளர் வில்சன், திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரையில் கண்காட்சி என்றாலே அது தினமலர் கண்காட்சி தான் என வழிமேல் விழி வைத்து
காத்திருந்த மக்களுக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் பல ஆச்சரியம், அட்டகாச அனுபவங்களை அள்ளித் தரும் கேரண்டியுடன் புதுப்புது பொருட்களும், உள்நாட்டுடன், வெளிநாடுகளின் உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன. குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் இன்றே வாங்க.இது உங்கள் கண்காட்சி; உங்களுக்கான கண்காட்சி.ஆர்வமாய் குவிந்த பெண்கள், குழந்தைகள்நேற்று கண்காட்சி துவங்கும் முன்பே பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் தமுக்கத்தில் குவித்தனர். அனைத்து ஸ்டால்களிலும் இடம் பெற்ற பொருட்களின்
பிரமாண்டம் பார்வையாளர்களை மிரட்டின.

குறிப்பாக, அழகை கூட்டும் அழகு சாதனம், பேவரிட் பேன்ஸி பேக்ஸ், டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், டிசைன்ஸ் சாரீஸ் ரகங்கள், விதவித ரெடிமேட் டிரஸ், வியக்க வைக்கும் ஜூட் பேக்ஸ், அசத்தலான அலங்கார மின் விளக்குகள், கலை நயமிக்க சிலைகள், மாடித் தோட்டத்திற்கான நாட்டு விதைகள், பிளான்டர்ஸ் அன்ட் நர்சரி, துபாய்
பக்லாவா என்ற புதிய வகை இனிப்பு வகைகள் என மனதுக்கு பிடித்த பொருட்களை விரும்பி வாங்கி மக்கள் உற்சாகமடைந்தனர்.

கண்காட்சியில் பங்கேற்ற பெண்களின் வளைக்கரங்களை வண்ணமயமாக்க மெகந்தி இலவசமாக வரையப்பட்டன.
தள்ளுபடி தாராளம்
கண்காட்சியில் இடம் பெற்ற ஸ்டால்களில் நிரம்பிக் கிடக்கும் பொருட்களை பார்க்கும்போது இது 'கண்காட்சியா', கடல்போல் விரிந்து கிடக்கும் 'பொருட்கள் காட்சியா'என வியக்க வைக்கும் பிரமிப்பை மக்கள் உணர்ந்தனர்.
வந்தவர்களில் இந்தாண்டில் புதிதாக வந்த பொருட்கள் என்ன என ஆர்வத்துடன் கேட்டு அவற்றை வாங்கி சென்றனர்.
பலர் வாஷிங் மெஷின், ஸ்மார்ட் அலைபேசி, ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, சார்ஜபிள் லைட்ஸ் உட்பட விதவிதமாக ஷாப்பிங் செய்தனர். மெகா சோபா, ஊஞ்சல், சேர் செட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து கிளம்பினர். பெரும்பாலான ஸ்டால்களில் 10 முதல் 20 சதவீதம் தள்ளுபடி உள்ளது. இலவசம், சாம்பிள்களும் பஞ்சமில்லாமல் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
கார், வீடு வாங்கலாம்
இக்கண்காட்சியில் ஒரு பகுதியாக பில்டு எக்ஸ்போ மற்றும் ஆட்டோமொபைல் எக்ஸ்போ களைகட்டுகிறது. ஒரே இடத்தில் பல விதமான புரமோட்டர்கள், முன்னணி கார் நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் பார்வையிட்டனர். தினமலர் கண்காட்சிக்கு வந்ததன் மூலம் சொந்தமாக வீடுகட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேற அச்சாரமாக அமையலாம் என ஆர்வமாய் மக்கள் பார்வையிட்டனர். அதுபோல் பட்ஜெட்டுக்கு ஏற்ற எந்த பிராண்ட் கார்களையும் வாங்கலாம் என கார் கம்பெனிகளின் அணிவகுப்பை மக்கள் பார்வையிட்டு, விரும்பியவர்கள் ஆர்வத்துடன் புக்கிங் செய்தனர்.
ரசிக்க... ருசிக்க... சுவைக்க...
ஸ்டால்களை சுற்றி சுற்றி மனம் நிரம்ப 'ஷாப்பிங்' செய்து முடித்த உற்சாகத்தில் அடுத்து என்ன என யோசித்தபோது 'என்னையும் கொஞ்சம் நிரப்புங்க' என வயிறு கிள்ளியதும், அருகே இருந்த புட் கோர்ட் பக்கம் மக்கள் சென்றனர்.
அங்கிருந்த மட்டன், சிக்கன் பிரியாணி, நண்டு லாலிபாப், பிஷ் பிரை, ஸ்பைரல் சிப்ஸ், ஜூஸ், பனியாரம், கோலா உருண்டை, பீட்சா, பர்கர், கரும்பு ஜூஸ், மூலிகை டீ என நாக்கு சொட்டும் வகைகளை வாங்கி ருசித்தனர்.
குட்டீஸ்களை குஷிப்படுத்திய போத்தீஸ் கேம் ஸோன்
இங்கே குட்டீஸ்கள் குஷியாக ஆடி பாடி விளையாட ஏராளமான கேம்ஸ்கள் இடம் பெற்றுள்ளன. எலக்ட்ரிக் கார், வாட்டர் போட், பேஸ்கட் பால், பலுான் ஷூட், டிவிஸ்டர் கேம், ஷார்க் கேம், பிக் டிரையின் மினி டிரையின், வாட்டர் ரோலர், ஏ.டி.வி., பைக், ஆர்ச்சரி என
குழந்தைகள் துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.
கலர் கலர் பலுான்களை இலவசமாக வாங்கி மகிழ்ந்தனர். டூவீலர், கார் பார்க்கிங் வசதி, தேவையான மருத்துவ உதவி என மக்கள் ஜாலி ஷாப்பிங் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 3 நாட்களே
இப்பிரமாண்ட கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்னும் 3 நாட்கள் மட்டுமே, திங்கள் வரை நடக்கும் கண்காட்சியை பார்க்க குழந்தைகளுடன் இன்றே வாங்க.
விரும்பிய பொருட்களை தள்ளுபடி சலுகையில் அள்ளிட்டு போங்க.
இணைந்து கரம் சேர்ப்போர்: பவர்டு பை ஜி ஸ்கொயர். அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அன்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் பிராங் பேபர், ஆல்பா பர்னிச்சர்ஸ், சலானி ஜூவல்லரிஸ், கோவை லட்சுமி, ரேடியோ பார்ட்னர் மிர்ச்சி, ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்.

