ADDED : டிச 04, 2024 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நுாலகர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய செஸ் பயிற்சி நடுவர் பாண்டியராஜன் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து பேசினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் ஸ்ரீகாந்த், சுரேஷ், தமிழ்வளவன், அபிஷேக் பாரதி, வீரேஸ்வர், திலகவதி தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். நுாலகர் சிவசூரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.