/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சரவணப்பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை
/
சரவணப்பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ADDED : செப் 05, 2025 04:04 AM

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு துறையினரின் மீட்பு பணி தொடர்பான ஒத்திகை பயிற்சி நடந்தது.
தீயணைப்பு மாவட்ட அலுவலர் வெங்கட் ரமணன், உதவி அலுவலர்கள் திருமுருகன், சுரேஷ் கண்ணன், திருப்பரங் குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார், தல்லாகுளம் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். மழை வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பது, கண்மாய், குளங்களில் தத்தளிப்பவர்களை மீட்பது, தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பது, பேரிடர்களில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகள் குறித்து ஒத்திகை நடந்தது.