நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்து மாணவியரின் கல்வி வளர்ச்சி, உயர்கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கணிதத் துறை தலைவர் மேகலா வரவேற்றார். முதல்வர் பொன்னி, பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்த்துறை தலைவர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.