UPDATED : நவ 04, 2026 08:25 PM
ADDED : நவ 04, 2026 08:25 PM
அ நிறம் | அளவு
மதுரை: கொட்டாம்பட்டி அலங்கம்பட்டி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நடந்தது.
வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ராணி தலைமை வகித்தார். மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தலைவர் சுரேஷ் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், பயிர் சுழற்சி முறை குறித்து விளக்கினார். மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பற்றி துணை இயக்குனர் வளர்மதி பேசினார். அட்மா திட்ட உதவியாளர்கள் ராஜதுரை, கண்ணன் ஒருங்கிணைத்தனர்.
