தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மல்லிகையில் நோய் மேலாண்மை

மல்லிகையில் நோய் மேலாண்மை

மல்லிகையில் நோய் மேலாண்மை


UPDATED : நவ 21, 2026 06:16 PM

ADDED : நவ 21, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 06:16 PM ADDED : நவ 21, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருப்பரங்குன்றம் பெரியகூடக்கோவில் கிராமத்தில் மல்லிகையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தலைவர் சுரேஷ் பேசியதாவது: மல்லிகையை மொக்குப்புழு, இலைச்சுருட்டுப்புழு, பூப்பேன், மிட்ஜெஸ், நுண் சிலந்தி ஆகியவற்றால் தாக்குதல் ஏற்படும். நல்ல பூக்களை எடுக்கும்போது மொக்குப்புழு தாக்கப்பட்ட பூக்களை தனியாக எடுத்து அழிக்கவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை எருவுடன் கலந்து செடிக்குச்செடி இடுவதன்மூலம் நுாற்புழு, மொக்குப்புழு தாக்குதலை குறைக்கலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் ‘எமாமெக்ட்டின் பென்சோயேட்’ 0.4 கி / 4 மில்லி ‘குளோரான்ட்ரானிலிப்ரோல்’ கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.

திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா பேசுகையில் ‘‘ நவ., முதல் பிப். வரை மல்லிகைப்பூ உற்பத்தி குறைவாக இருக்கும். செப்டம்பரில் மல்லிகைச் செடிகளை கவாத்து செய்து நீர் பாய்ச்சி உரமிட்டால் பூ உற்பத்தியை அதிகரிக்கலாம்’’ என்றார்.

தோட்டக்கலைத்துறை செயல்பாடுகள் குறித்து மதுரை கிழக்கு உதவி இயக்குநர் கார்த்தி ப்ரியா பேசினார். தோட்டக்கலை அலுவலர் தன்ராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us