UPDATED : நவ 21, 2026 06:16 PM
ADDED : நவ 21, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
மதுரை: தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.எம்.) மதுரை கிளை சார்பில் தென் மண்டல மாநாடு மதுரையில் நடந்தது.
டி.வி.எஸ்., சப்ளை செயின் நிறுவன செயல்தலைவர் தினேஷ் பேசுகையில் ‘‘ஒவ்வொரு நிறுவனத்தின் வணிக உத்திகளிலும் பணியாளர்களே மையமாக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, மாறிவரும் வணிகச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியம்’’ என்றார். தேசியத் தலைவர் பசவராஜூ, முன்னாள் தலைவர் ராஜா, தென்மண்டலத் துணைத் தலைவர் இளங்கோ, மதுரை கிளைத்தலைவர் அழகுமுனி, செயலாளர் ராஜ்குமார் பங்கேற்றனர்.
