ADDED : ஜன 03, 2026 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் தண்ணீர் தொட்டி பராமரிப்பின்றி பயன்பாடற்று காட்சிப் பொருளாக உள்ளது.
இங்கு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. போர்வெல் மோட்டார் பழுதால் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டது.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் தினமும் வந்து செல்கின்றனர். பொது பயன்பாட்டிற்கான தண்ணீர் தொட்டி இல்லாமல் சிரமம் அடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

